Ashada Navratri -Varahi Amman | ஆஷாட நவராத்ரி - வாராஹி அம்மன் வழிபாடு










Varahi Navratri is celebrated in Ashada month Shukla paksha prathamai to navami thithi. Panchami thiti falling on 25th June - Thursday is an auspicious day to worship Varahi Amman.Those who has weak Mars, Rahu & kethu in their horoscope would be benefited by worshiping Varahi Amman.  Goddess Varahi protects her devotees from the enemies.Dispels all the evil effects.

Our famous Chozha king Sri Rajaraja chozhan & hs ancestors are sincere devotees of Sri Vaarahi amman. They never forget to worship her before going to war


ஆஷாட மாதம் சுக்ல பட்ச ப்ரதமை திதி முதல் நவமி வரை ஆஷாட நவராத்ரி -வாராஹி அம்மனை வழி படும்  முறை . வாராஹி அம்மனை வழி படுவதால் உள்ளம் தூய்மை அடையும் . அக, புற  பகை ஓழியும் .நல்ல பேச்சாற்றல் கிடைக்கும். வாக்கு பலிக்கும் . ஜாதகத்தில் செவ்வாய் , ராஹு , கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் .எதிரிகள் தொல்லை முற்றிலுமாக  நீங்கும் .வியாபார போட்டி பொறாமை நீங்கும் . நோய்கள் அகலும் .கீழ்  கண்ட ஸ்லோகத்தை கூறி வழி படவும். பஞ்சமி திதி அன்று வழி படுவது மிகவும் நல்லது .

ஸ்ரீ லலிதா திரிபுரஸுந்தரியின் கையிலுள்ள பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியவள் ஸ்ரீ மஹா வாராஹி ..ஸேனைகளுக்குத்   தலைவியாகவும் அன்னையை பாதுகாப்பவளாக இருக்கும் இவள் வராஹ முகத்துடன் இருப்பதால் வாராஹி என்று அழைக்கப் படுகிறாள். ஸப்த மாதாக்களில் இவள் ஆறாவதாக  பூஜிக்கப்படுபவள் .நம்  ஒவ்வொருவர் உடம்பிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் இரு கண் புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞ்சா  சக்கிரபகுதிக்கு  வாராஹியே தேவதையாவாள் 




 வந்தே வாராக வக்த்ராம் வரமணி மகுடாம் வித்ரும ஸ்ரோத்ர பூஷாம்  

ஹார க்ரைவேய துங்க ஸ்தனபர நமிதாம் பீத கௌஸேய வஸ்த்ராம்  |  

தேவீம் தட்ஸ்சோத்ரவ ஹஸ்தே முஸல மத வரம் லாங்கலம் வா கபாலம் 

வாமாப்யாம் தாராயந்தீம் குவலய கலிதாம் ஸ்யாமளாம் ஸுப்ரசன்னாம்||   

Repeat this sloka 


 Burning wicks made from lotus  or banana stem is used in the pooja room  lamp( preferably ghee ).It should be placed on the right side of Varahi amman photo . Yellow silk cloth is used for  dressing Her. Red flowers has to be offered.
   
Tell this mantras offering red color flowers 

1.பஞ்சம்யை நம:
2.தண்ட நாதாயை நம:
3.ஸங்கேதாயை நம: 
4.சமயேஸ்வர்யை நம: 
5.ஸமய ஸங்கேதாயை நம:
6.வாரஹ்யை நம:  
7.போத்ரிண்யை நம:
8.ஸி வாயை நம:
9.வார்த்தாள்யை  நம:
10.மஹாஸேனாயை நம:
11.ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
12.அரிக் ன்யை நம:

நைவேத்யம் - naivedyam

Vada made of black urad dal, curd rice with pepper, panakam with dry ginger & sweet potato  (சர்க்கரை வள்ளி கிழங்கு ) are offered.

கருப்பு உளுத்தம் பருப்பு வடை 

மிளகு போட்ட தயிர் சாதம் 

சுக்கு கலந்த பானகம் 

வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு. 

தாமரை அல்லது வாழைத்   தண்டு  திரி நூலிட்டு நெய் தீபம் ஏற்றி வாராஹி அம்மனுக்கு வலதுபக்கம் வைக்கவும் . அம்மன் படத்திற்கு  மஞ்சள் பட்டுத் துணி சாத்தி 12 நாமாக்களையும்  சொல்லி சிவப்பு புஷ்பத்தால் அர்ச்சிக்கவும் . முதலில் சொல்லிய "வந்தே வாராஹ " என்ற ஸ்லோகத்தை மீண்டும் சொல்லவும் .





  
பஞ்சமீ  தண்டநாதா ச ஸங்கேதா சமயேஸ்வரீ |

ததா ஸமய ஸங்கேதா வாராஹீ போத்ரிணீ ஸிவா ||

வார்த்தாலீ ச மஹாஸேனா ப்யாஜ்ஞா சக்ரேஸ்வரீ  ததா |

அரிக்னீ  சேதி ஸம்ப்ரோக்தம்  நாம  த்வாதஸகம்  முனே ||


மேற்கண்ட ஸ்லோகத்தில் வாராஹி அம்மனின் 12 திருநாமங்களும் இருக்கின்றன .இதை தினந்தோறும் சொல்லி வந்தால் நன்மை பெறலாம் 

நமது சோழச்  சக்ரவர்த்தி இராஜராஜ சோழனும் அவனது முன்னோர்களும் ஸ்ரீ வாராஹி அம்மனுடைய தீவிர பக்தர்கள்.அவளை  வணங்கிய பின்னரே போருக்கு   செல்வார்கள் 
 


























Comments