यदा यातनादेहसन्देहवाही
भवेदात्मदेहे न मोहो महान्मे ।
तदा काशशीतांशुसङ्काशमीश
स्मरारे वपुस्ते नमस्ते स्मराणि ॥ २५ ॥
யதா யாதனாதேஹஸந்தேஹவாஹீ
பவேதாத்மதேஹே ந மோஹோ மஹான்மே |
ததா காஸஸீதாம்ஸுஸங்காஸமீஸ
ஸ்மராரே வபுஸ்தே நமஸ்தே ஸ்மராணி || 25 ||
यदा= எந்த சமயத்தில் मे = எனக்கு आत्मदेहे = என்னுடைய
சரீரத்தில் यातनादेह = நரக வேதனையை அனுபவிக்கும் சரீரத்தின் सन्देहवाही = ஸந்தேஹம் வரும்படி महान् = பெரிய
मोह = மயக்கம் न भवेत् = ஏற்படாதோ तदा = அப்பொழுதே ईश =
ஏ பரமேச்வரா स्मरारे = மன்மதனை நாசம் செய்தவனே ! काश =
நாணல் शीतांशु = குளிர்ந்த கதிர்களையுடைய சந்திரன் இவர்களுக்கு सङ्काशं = ஒப்பான ते = உன்னுடைய वपु :சரீரத்தை
स्मराणि = தியானம் செய்வேனாக .ते = உமக்கு नम: வணக்கம் .
மரணசமயம் நெருங்கும் பொழுது மிகுந்த பயமுண்டாகிறது. நாம் செய்த பாவங்களை
Valamburi Vinayagar
Sri Ramana Maha Rishi
God Shiva- Sri Atulya Nadeswarar & His consort Azhagiya Ponnazhagi.Sri Durgaiyamman at right facing south ,a rare one..Temple situated in a small mountain at Thenpennai river.Temple is 35 kms from Vilupram to Thirikovilur .Place: Arakandanallur ( Historical name:Araiyani nallur )
அனுபவிப்பதற்கான சூஷ்ம சரீரம் வந்து விட்டதோ
என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது.மோஹமும் நம்மை
குடி கொள்கிறது. இந்நிலையை நான் அடைவதற்கு
முன்பாகவே தாபத்தைப் போக்கும் வெளுப்பு நிறமுள்ள
உம் மூர்த்தியை என் மனம் நினைக்கும்படி அருள வேண்டும் .
பகவானுடைய மூர்த்தி தூய வெளுப்பு நிறமானது . ஸத்வ
குணம் பொருந்தியது. அதை ஸ்மரிப்பதால் நமக்கும்
மோஹத்திற்குக் காரணமான தமோ குணம் நீங்கி ஸத்வ
குணம் ஏற்பட்டுவிடும்.சந்திரனைப் போன்றது என்பதால்
எல்லாத் தாபங்களையும் நீக்கும் என்பதைக் காட்டுகிறார்.
சிவமூர்த்தியை ஸ்மரிப்பவனுக்கு சூஷ்ம சரீரமோ, நரகமோ
ஒன்றும் வாராது. சிவலோகத்தை அடைவான்.
தேவாரம் பாடல் பெற்ற தலம்( நடு நாடு ).ஸ்ரீ ரமணர் திருவண்ணாமலை செல்லும் முன்னர் இங்கு வந்து தரிசனம்
செய்திருக்கிறார்.அதனால் அவருக்கு தனி சந்நிதி உள்ளது.
பிற சமயத்தவர் கோயில் வழிபாடு செய்வதைத் தடுத்தி நிறுத்தியிருந்ததை திரு சம்பந்தர் இத்தலத்து இறைவனைப்
பாடி மீண்டும் வழிபாட்டினைத் துவங்கி வைத்துள்ளார் .இங்கிருந்து பார்த்தால் திருவண்ணாமலை முழுவதும்
தெரியும் .Photo courtesy Dinamalar magazine.
Comments
Post a Comment