यदा दुर्निवारव्यथोऽहं शयानो
लुठन्निःश्वसन्निःसृताव्यक्तवाणिः ।
तदा जह्नुकन्याजलालङ्कृतं ते
जटामण्डलं मन्मनोमन्दिरं स्यात् ॥ २२ ॥
யதா துர்னிவாரவ்யதோ(அ)ஹம் ஸயானோ
லுடன்னி:ஸ்வஸன்னி:ஸ்ருதாவ்யக்தவாணி: |
ததா ஜஹ்னுகன்யாஜலாலங்க்ருதம் தே
ஜடாமண்டலம் மன்மனோமந்திரம் ஸ்யாத் || 22
यदा= எப்பொழுது ( அந்த்ய காலத்தில் ) अहं = நான் दुर्निवारव्यथ =போக்கமுடியாத வேதனையுடையவனாக शयान = படுத்துக்கொண்டும் लुटन् = பூமியில் புரண்டு கொண்டும்
नि:श्वसन् = பெருமூச்சு விட்டுக்கொண்டும் निस्सृताव्यक्तवाणि =
பிறருக்கு புரியாதபடி உளறிக்கொண்டும் பிதற்றிக்
கொண்டுமிருப்பேனோ , तदा = அப்பொழுது
जह्नुकन्याजलालङ्कृतं = ஜஹ்னு மஹர்ஷியின் பெண்ணான
கங்கா தேவியினுடைய தீர்த்தத்தால் அலங்கரிக்கப்பட்ட
ते = உன்னுடைய जटामण्डलं = ஜட மண்டலமானது
मन्मनोमन्दिरं स्यात् =என் மனதிற்கு இருப்பிடமாக இருக்கட்டும்.
This is "annabhisheham" performed to God Shiva on the full moon day of "Aippasi" (ஐப்பசி மாத பவுர்ணமி ) Tamil month .

காலன் நம்மை நெருங்கும் பொழுது நாம் பலவிதமான
துன்பங்களுக்குள்ளாகிறோம் . நமக்குண்டாகும் வேதனைகளைத் தாங்கமுடியாமல் நாம் பூமியில்
படுத்துப் புரளுகின்றோம். நம்முடைய சுய அறிவை
இழந்து விடுவதால் பலவிதமாகப் பிதற்றுகின்றோம் .
அச்சமயம் நமது மனது பகவானுடுடைய திருச்சடை முடி
-யில் லயிக்க வேண்டுமென்று இப்பொழுதே வேண்டிக்
கொள்ளல் வேண்டும். இவ்வாறு நாம் பிரார்த்தித்தால்
நாம் துன்பமுறும்பொழுது திருச்சடையுடன் நம்மிடம்
தோன்றுவார். அவரது சடையில் வீற்றிருக்கும் கங்கா
தேவியுனடைய குளிர்ந்த நீர் நம் மேல் பட்டு நமது
துயரனைத்தையும் நீக்கும் .ஆகையால் நம் புலன்களனைத்தும் நன்றாக இயங்கும்பொழுதே நாம்
பரமேச்வரனை வழி பட்டு அவரது அருளைப் பெற வேண்டும் .
This is "annabhisheham" performed to God Shiva on the full moon day of "Aippasi" (ஐப்பசி மாத பவுர்ணமி ) Tamil month .
Comments
Post a Comment