Shiva Bhujangam slokam 21



       

                                        यदा दारुणाभाषणा भीषणा मे
                                   भविष्यन्त्युपान्ते कृतान्तस्य दूताः ।
                                     तदा मन्मनस्त्वत्पदांभोरुहस्थं
                                   कथं निश्चलं स्यान्नमस्तेऽस्तु शंभो ॥ २१





                             யதா தாருணாபாஷணா பீஷணா மே
                         பவிஷ்யந்த்யுபாந்தே க்ருதாந்தஸ்ய தூதா​: |
                         ததா மன்மனஸ்த்வத்பதாம்போருஹஸ்தம்
                 கதம் நிஸ்சலம் ஸ்யான்னமஸ்தே(அ)ஸ்து ஸம்போ ||  21


   शंभो =  ஏ பரமேஸ்வரா ! यदा = எப்பொழுது  दारुणाभाषणा = மிகவும் 
கடுமையான பேச்சுக்களை உடையவர்களாயும் भीषणा =
பயங்கரமானவர்களுமான कृतान्तस्य = யமனுடைய दूताः 
ஒற்றர்கள் मे = என்னுடைய  उपान्ते = அருகில்भविष्यन्ति  =
இருப்பார்களோ     तदा = அப்பொழுது मन्मन : என்னுடைய 
 மனம்  त्वत्पदाम्भोरुहस्थं = உம்முடைய  பாதகமலத்தையடைந்து    
कथं = எவ்வாறு निश्चलं =  स्यात् =  இருக்கும் ?
ते = உமக்கு नम : வணக்கம் अस्तु = இருக்கட்டும் .

    நம்முடைய அந்திய  காலத்தில்  காலனுடைய பயங்கரமான தூதர்கள் நம்மை அணுகுவார்கள் . அவர்கள் வெட்டு குத்து 
கொல்லு என்று பயங்கரமாக ஒருவருக்கொருவர்   .அதைக்கேட்டு மனம் மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கும்.அப்பொழுது  பரமேச்வரனுடைய பாத கமலங்களில் மனதை நிலைநாட்டுவது இயலாத கார்யம் .
ஆகையால்  இப்பொழுதே பகவானுடைய பாத கமலங்களில்  
வணங்கி மனதை ஈடுபடச் செய்யவேண்டும். இவ்வாறு 
செய்வதால் யமனுடைய தூதர்கள் நம் முன் வரும்  பொழுது  
நமது மனம் பகவானிடம் லயித்துவிடும். அந்த சமயத்தில்
நமக்கு அவர்களால்  யாதொரு  துன்பமும் ஏற்படாது .   
God Shiva consumed poison on saturday during"Pradhosha time"in between 4.30-6.00pm to save the all livingbeings.Photo courtesy:Kumudam Jyodhidam magazine.

Comments