शिरो दृष्टिहृद्रोगशूलप्रमेह-
ज्वरार्शोजरायक्ष्महिक्काविषार्तान् ।
त्वमाद्यो भिषग्भेषजं भस्म शंभो
त्वमुल्लाघयास्मान्वपुर्लाघवाय ॥
சிரோ த்ருஷ்டிஹ்ருத்ரோகசூலப்ரமேஹ-
ஜ்வரார்சோஜராயக்ஷ்மஹிக்காவிஷார்தாந்
த்வமாத்யோ பிஷக்பேஷஜம் பஸ்ம சம்போ
த்வமுல்லாகயாஸ்மாந்வபுர்லாகவாய ௧௫
शम्भो = சம்புவே , त्वं = நீ , आद्य : முதல்வனான भिषक् =
வைத்யன் भस्म = விபூதியே भेषजम् = மருந்து(ஆகையால் )
त्वं = நீர் सिरोदृष्टिहृद्रोग = தலைநோய் , கண்நோய் , இருதய
- நோய் सूल = வயிற்று வலி , प्रमेह =சிறுநீர் பெருக்கு
ज्वर = காய்ச்சல் अर्श = மூலரோகம் जरा = மூப்பு यक्ष्म = காச
-நோய் हिक्का = விக்கல் विष = விஷம் இவைகளால்
आर्तान् = பீடிக்கப்பட்ட எங்களை पुन = மறுபடியும்
वपुर्लागवाय= தேஹத்தில் ஸாமர்த்தியம் ஏற்பட त्वं = நீர்
वुल्लाघय = ஸ்வஸ்தப்படுத்துவாயாக.
உலகில் அநேகமாக எல்லோரும் ஏதாவது ஒரு
வியாதியால் துன்புறுகின்றனர். அதிலும் சில பெரிய
வியாதிகள் வந்தால் சுலபமாக குணமாவதில்லை .
வியாதிகள் வந்து உடலைப் பீடித்துக்கொண்டிருந்தால் அவன் ஒரு காரியமும்
செய்ய முடியாது. உடலில் லாகவம் இருக்காது.பலம்
எல்லாம் போய்விடும் . அந்நிலையில் அவன் எப்படி
சிவபூஜை , சிவத்யானம் முதலியவைகளை செய்ய
முடியும் .அதனால் ஈசுவரனிடம் வேண்டுகிறார் : என்
சரீரத்திலுள்ள ஒரு அவயத்திலாவது ஒரு வியாதியும்
இருக்கக் கூடாது . ஏதாவது வியாதி இருந்தால் அது
உடனே நீங்க வேண்டும் . மேல் கொண்டு வியாதி
ஒன்றும் வராமல் சரீரம் பூர்ண ஆரோக்கியத்துடன்
இருக்கும்படி அனுக்ரஹம் செய்ய வேண்டும் (என்று ).
விஷ உபாதையும் மூப்பும்கூட ஏற்படக் கூடாது என்று
கேட்கிறார் . வியாதியுள்ளவன் தன் பிணி நீங்க
வைத்யனைத் தேடிச் செல்வது வழக்கம் . அந்த
வைத்யனிடம் இவன் வியாதியைப் போக்கும் மருந்து
இருந்தால்தான் அவன் குணப்படுத்த முடியும் .
அதற்காகக் கூறுகிறார் - " நீரே முதன்மையான
வைத்யர். உம்மிடமுள்ள பஸ்மம் ஸகல வியாதிகளையும் போக்கும் சிறந்த மருந்து ".
"प्रथमो दैव्यो भिषक् " भिशक्तमं त्वां भिषजां शृणोमि " என்று
வேதமானது பரமேசுவரனை முதல் வைத்யராகவும்
வைத்யர்களுக்குள் மிகச் சிறந்தவராகவும் கூறுகிறது
இந்த சுலோகத்தை ஜபித்து விபூதியை உடலில்
பூசிக்கொள்வதாலும் உட் கொள்வதாலும் தலைவலி
கண்வலிமுதலிய ஸகல ரோகங்களும் நீங்கும் .
உடலில் வலிமையும் , பொலிவும் உண்டாகும்.
Sri Patteeswarar & Goddess Pachainayagi of Perur temple near coimbatore ( Tamil Nadu )Photo courtesy:Dinamalr magazine.Thanks to Sri Sringeri Sarada peetham for the Sanskrit & Tamil texts.

Comments
Post a Comment