विरूपाक्ष विश्वेश विश्वादिदेव
त्रयीमूल शंभो शिव त्र्यंबक त्वम् ।
प्रसीद स्मर त्राहि पश्यावमुक्त्यै
क्षमां प्राप्नुहि त्र्यक्ष मां रक्ष मोदात् ॥ ८
விரூபாக்ஷ விஸ்வேஸ விஸ்வாதிதேவ
த்ரயீமூல ஸம்போ ஸிவ த்ர்யம்பக த்வம் |
ப்ரஸீத ஸ்மர த்ராஹி பஸ்யாவமுக்த்யை
க்ஷமாம் ப்ராப்னுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத் || 8 |
विरूपाक्ष= நெற்றிக் கண்ணை உடையவனே विश्वेश = உலகங்களுக்கெல்லாம் ஈசனே विश्वादिदेव = உலகங்களுக்கெல்லாம் ஆதியான கடவுளே त्रयीमूल =மூன்று வேதங்களுக்கும் காரணமாக இருப்பவனே.शंभो = நன்மையைத் தருகின்றவனே शिव =மங்கள உருவம் கொண்டவனே
त्रयंबक = முக்கண்ணனனே त्वं = நீ प्रसीद = அருள் புரிவாயாக स्मर = என்னை
ஞாபகத்தில் வைத்துக்கொள்வாயாக. त्राहि = என்னைக் காப்பாற்றுவாயாக
अवमुक्त्यै = மோட்சத்தை அளிப்பதற்காக पश्य = கடாட்சிப்பாயாக
क्षमांप्राप्नुहि =பொறுத்துக்கொள்வாயாக त्रयक्ष = மூன்று கண்களையுடையவனே
मां = என்னை मोदात् = சந்தோஷத்துடன் रक्ष = காப்பாயாக .
பரமேச்வரன் நெற்றிக்கண்ணை உடையவன்.அதனால் அவன் கொடிய
அரக்கர்களை அழித்து உலகங்களை ஆபத்துகளிலிருந்து மீட்கின்றான் .
உலகங்களையெல்லாம் படைத்தவன் . ஆகையால் அவனே முதற் கடவுள். ருக் , யஜுஸ் , ஸாம என்ற வேதங்களுக்கெல்லாம் அவனே மூலம் . எல்லா நன்மைகளும் அவனிடத்திலிருந்தே ஏற்படுகின்றன .அதனால் அவன் சிவனென்று அழைக்கப் படுகின்றான் .அவனுடைய அருளால்தான் நாம் கடைத்தேற முடியும் .ஆதலால் அவன் நம்மை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நம்மிடம் அருள் வைத்து நம்மை மோட்சத்தில் சேர்ப்பிக்க வேண்டும் .நம் குற்றங்களை மன்னித்து அவர் தன்னுடைய க்ருபா கடாட்சத்தை நம்மிடத்தில் செலுத்தி நம்மைப் பரிவுடன்
காக்க வேண்டும்.
Photo courtesy: Vasanth TV .

Comments
Post a Comment