Shiva Bhujangam Slokam 12

             Sri . Adi Shankara has been requesting Lord Shiva repeatedly in Shiva Bhujangam  for the sake of devotees of Shiva. He says  that Shiva has accepted
Cow ( Nandhiheswarar), crescent moon and snake . An animal, snake & not a full moon were accepted by you, so you can accept me  whom have some shortcoming ( Dhoshas ). Snake has split tongue( usually referred as two), which denotes man as speaking with  two tongues(hiding
one thing in the mind and speaking out another). He tells Shiva that i don't  have analytical knowledge, behaving like an animal( distinguishing between good & bad deeds).It is your duty to protect me by leaving aside all my shortcomings with your grace as  i surrender in your lotus feet.

                                                                                                 
                                       पशुं वेत्सि चेन्मां तमेवाधिरूढः
                               कलङ्कीति वा मूर्ध्नि धत्से तमेव ।
                             द्विजिह्वः पुनः सोऽपि ते कण्ठभूषा
                              त्वदङ्गीकृताः शर्व सर्वेऽपि धन्याः ॥
                     பஸும் வேத்ஸி சேன்மாம் தமேவாதிரூட​:
                         கலங்கீதி வா மூர்த்னி தத்ஸே தமேவ | 
                     த்விஜிஹ்வ​: புன​: ஸோ(அ)பி தே கண்டபூஷா
                        த்வதங்கீக்ருதா​: ஸர்வ ஸர்வே(அ)பி தன்யா​: ||    

        शर्व  = சிவ பெருமானே ! मां  = என்னை  पशुं  = மிருகமாக   वेत्सि   चेतः  

அறிவீராகில்  तं  येव  = அப்பசுவின்  மேலேயே   अधिरूढ    நீர்  ஏறிக் 

கொண்டிருக்கிறீர்.  वा  =அல்லது  कलङ्की  इति = களங்கமுள்ளவன்  என்று 

   என்னை நினைப்பீராகில்  तमेव = அந்த களங்கமுள்ள சந்திரனையே 

मूर्ध्नि = சிரஸில் धत्से = தரிக்கினறீர் . पुन : மறுபடியும் द्विजिह्व  =  இரண்டு 

நாக்குகளையுடைவன் என்று என்னை எண்ணுவீராகில்  सो   पि 

ஸோ (அ ) பி = அந்த இரண்டு நாக்குகளை உடைய பாம்பும் 

ते = உன்னுடைய कण्ठभूषा = கழுத்திற்கு அணியாக விளங்குகிறது .

त्वदङ्गीकृता : உம்மால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  सर्वे  पि = எல்லோருமே 

धन्या : பாக்யசாலிகள் .

    என்னிடம்  குற்றங்களுள்ளபோதிலும்  என்னைக்  கைவிடாமல் 

காப்பாற்ற வேண்டும் .ஏனெனில்  என் போன்ற  குற்றமுள்ள பலருக்கு 

உயர்ந்தநிலை  அளித்திருக்கிறீர்  .அவ்விதமிருக்க  தோஷத்தைக் காட்டி 

என்னை மட்டும்  கை விடுவது உசிதம் அல்ல . பசுவைப்போல்  நான் 

விவேகம் இல்லாமலிருப்பது வாஸ்தவம் .ஆனால் பசுவையே 

வாஹனமாக   ஆக்கிக் கொண்டு அதை ஆதரித்துள்ள  தாங்கள்  என்னை

எப்படி விலக்க முடியும் ? களங்கமுள்ள  சந்திரனை சிரஸில் 

தரித்துள்ள தாங்கள் களங்கமுள்ள எனக்கும் அருள்  செய்ய வேண்டும். 

இரண்டு நாக்குகள் கொண்ட பாம்புகளை கழுத்தில்  மாலையாக 

அணிந்திருக்கிறீர் . ஆனதால் இரண்டு விதமான நாக்கு உள்ள 

( ஒரே மாதிரிப்  பேசாமல் உள்  ஒன்று வைத்துப்  புறம்பொன்று பேசும் )  

என்னையும் காப்பாற்ற வேண்டும்  என்று கேட்கிறார் . குற்றங்கள் பல 

செய்த  போதிலும்  அதைப் பொருட்படுத்தாமல்  கருணையால் 

மன்னித்து  அருள் செய்வது பரமசிவனுக்கு இயற்கையாக 

அமைந்துள்ள ஸ்வாபம் . ஆகையால்  குற்றவாளியான தனக்கும் அருள் 

செய்ய  வேண்டும் என்று வேண்டுகிறார் . பரமசிவனின்  அருள் 

பெற்றவன்தான்  உலகில்  பாக்யசாலி.  Bottom photo: Sri Kaduveli Siddha.These 

 are from Sri Maha Kaleswarar temple( Shiva Linga installed by Rishi Makalar, also installed 


 by    him one at Ujjaini ( North India )& another one at Irumbai Makalam( Near 

Mayiladuthurai , Tamil Nadu .Maha Kaleswarar temple in Puducheri to Tindivanam route 

(10 kms ).You have to get down at Thiruchitrambalam junction road - 2 kms from there.Kadu

-veli Sidhdha has done penance here, which has an interesting History.Photo courtesy :

Dinamalar magazine.With thanks to Sringeri Peetham for the Sanskrit & Tamil texts.





Sri .Maha Kaleswarar                   Goddess Kuyilmozhi Nayagi (Having sweet voice as Cuckoo)







Comments