अयं दानकालस्त्वहं दानपात्रं भवानेव दाता त्वदन्यं न याचे |
भवद्भक्तिमेव स्थिरां देहि मह्यं कृपाशील शंभो कृतार्थोस्मि तस्मात् ||
அயம் தானகாலஸ்த்வஹம் தானபாத்ரம்
பவானேவ தாதா த்வதன்யம் ந யாசே |
பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்
க்ருபாஸீல ஸம்போ க்ருதார்த்தோஸ்மி தஸ்மாத் ||
कृपाशील = தயவுகாட்டும் தன்மை வாய்ந்த शंभो = சிவபெருமானே !
अयं = இது दानकाल: = கொடுப்பதற்கு உரிய ஸமயம் . अहं तु = நானும்
दानपात्रं = தானம் வாங்கத் தகுதி வாய்ந்தவன் भवान् एव = தாங்களே
दाता = கொடுக்கின்றவர் . त्वदन्यं = உம்மைத் தவிர வேறு ஒருவரையும்
न याचे = வேண்ட வில்லை. मह्यं = எனக்கு स्थिरां = நிலைத்து நிற்கின்ற
भवद्भक्तिमेव = உம்முடைய பக்தியையே देहि = கொடுப்பீராக . तस्मात् =
அதனால் कृतार्थ : கை கூடிய கார்யத்தையுடையவனாக अस्मि =ஆவேன்
முன் சுலோகத்தில் தான் வேண்டிக்கொண்டபடி , பகவான் தன அருகில்
வந்து என்ன வேண்டுமெனக் கேட்க எப்பொழுதும் உறுதியான பக்தி
இருக்கும்படி அனுக்கிரகிக்க வேண்டுகிறார் .இந்த அசஞ்சல பக்தியைத்
தானமாகக் கொடுக்கும்படி கேட்கிறார் . உலகில் தானம் நடைபெற
நான்கு வஸ்துக்கள் தேவை . கொடுக்கிறவன் ( दाता ), வாங்குபவன்
( पात्रं प्रतिग्रगिता ), கொடுக்கப்படும் பொருள் ( देयं ), காலம்.இந்நான்கும் இங்கு
நன்கு அமைந்திருப்பதைக் காட்டுகிறார். இங்கு தானமாகக்
கொடுக்கப்படும் பொருள்" உறுதியான பக்தி ". இது என்னிடம்
இல்லாததாலும் இப்பொழுது எனக்குத் தேவைப் படுவதாலும் , நான்
-தான் தானம் வாங்கத் தகுதி வாய்ந்தவன் .இப்பொழுதுதான் தானம்
செய்வதற்கு உரிய காலம். உம் அருளால்தான் எனக்கு பக்தி ஏற்படும் .
ஆகையால் நீர்தான் கொடுப்பவர் ( दाता ). இதைக் கொடுப்பதற்கு
வேறு யாருக்கும் சாமர்த்தியம் இல்லாததால் உம்மைத் தவிர வேறு
யாரையும் நான் வேண்ட வில்லை. இவ்வளவும் உலகில் உள்ள தானம்
மாறி அமைந்திருந்தும் ஒரு அம்சத்தில் மட்டும் வித்யாஸம்
காணப்படுகிறது. உலகில் தானம் வாங்குபவனை விட தானம்
கொடுப்பவனுக்குத்தான் அதிகமான நன்மை ஏற்படுகிறது . இங்கு
தானம் கொடுப்பவர் ஈஸ்வரன். அவருக்கு இந்த தானத்தால் அடைய
வேண்டியது ஒன்றும் இல்லை .ஆனால் தானம் வாங்குபவன் இந்த
பக்தியைக் கொண்டு மேலான பயனை அடைந்து விடுகிறான் .
Sri.Narasimha Bharathi swamigal (32nd Acharya of Srigeri Sarada Peetham) was in the process of selecting a junior Acharya.He approached The Mysore King. Accordingly , the third son of the Samastana Vidwan ( kunigal Sastrigal ) was brought to the king's Durbar.The senior Acharya asked the boy Sri sivasamy ( 9 years old then ), what do you want , dear child?.He immediately recited the Slokam: "अयं दानकाल" :what a great person he is.See his maturity at the age of 9.He is none other than Sri .Satchidhanandha Shivabinava Narasimha Bharathi swamigal, who later built the temple for Sri Adi Shankarar at his birth place Kaladi in Kerala.
Sri Ayyarappar ( Thiruvaiyaru, 16 kms from Thanjavur- Sri Dharmasamvardhini)
ஐயாறப்பர்
அறம்வளர்த்த
நாயகி
photo courtesy
Dinamalar Magazine.
51st Sakthi peetam
Praised in Holy Tamil hymn Devaram by Saints Sambandar & Appar.
Comments
Post a Comment