त्वदन्य : शरण्य : प्रपन्नप्रपन्नस्यस्य नेति प्रसीद स्मरन्नेव हन्यास्तु दैन्य्म् |
न चेत्ते भवेद्भक्तवात्सल्यहानिस्ततो मे दयालो सदा संनिधेहि | |
த்வதந்ய ஸரண்ய : ப்ரபந்நஸ்ய நேதி
ப்ரஸீத ஸ்மரந்நேவ ஹந்யாஸ்து தைந்யம் |
ந சேத்தே பவேத் பக்தவாத்ஸல்யஹாநி -
ஸ்ததோ மே தயாளோ ஸதா சந்நி தேஹி | |
दयालो= தயவுடன் கூடியவனே !प्रपन्नस्य = தஞ்சமடைந்தவனுக்கு त्वदन्य =
உன்னைத்தவிர வேறு ஒரு शरण्य = புகல் இல்லை इति = என்பதை स्मरन् =
ஞாபகம் வைத்துக்கொண்டு प्रसीद = அனுக்ரஹம் செய் दैन्य्म् = ஏழ்மையை
हन्या : போக்குவாயாக न चेत् = இல்லாவிடில் ते = உனக்கு
भक्तवास्तल्यहानि भवेत् =பக்தனிடம் அன்பு கொண்டவன் என்பது போய் விடும்
तत : ஆகையால் सदा = எப்பொழுதும் मे = என்னுடைய संनिधेहि = அருகில்
இருப்பாயாக .
பரமேச்வரன் பக்தர்களிடம் மிகுந்த அன்பு வாய்ந்தவர் . அவர் மிகுந்த
தயவுள்ளவர்.தன்னிடம் தஞ்சம் புகும் பக்தர்களின் ஏழ்மையைப் போக்கி
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்பவர். இவ்வாறு
"பக்தவத்ஸலர் " என்ற பெயர் பகவானுக்கு ஏற்பட்டிருக்கிறது. உம்மை
தஞ்சம் அடைந்த என்னை கைவிடுவீராகில் நான் அழிந்து போவேன் .
என்னைக் காப்பாற்ற இவ்வுலகில் உம்மைத் தவிர வேறு ஒருவரும்
இல்லை. தஞ்சமடைந்தவனைக் கை விட்ட உம்மை யாரும்
பக்தவத்ஸலன் என்று கூற மாட்டார்கள். "பக்தவத்ஸலன் " என்ற
கீர்த்தி நிலைத்திருக்க வேண்டுமானால் என்னை கட்டாயம்
காப்பாற்றியாக வேண்டும். இது உம்முடைய கடமையாகும் என்று
வற்புறுத்துகிறார். ஸ்ரீ ஆதி சங்கரர் எவ்வளவு சாதுர்யமாக
இறைவனிடம் பிரார்திக்கின்றார் பாருங்கள். அவரோ முற்றிலும்
துறந்த துறவி .அவர் நமக்காக எவ்வளவு பரிந்து சிவனிடம் கேட்கிறார் .
Sri Parimala Sugandha Nayagi Sri Kalyana Sudareswarar - Thiruvelvikkudi near
Kuttalam in Kumbakonam - Mayiladudhurai route ,Tamil Nadu.Photo courtesy:Dinamalar
Magazine.
Comments
Post a Comment