|| शिव भुजङ्गम् ||
जगन्नाथ मन्नाथ गौरीसनाथ
प्रपन्नानुकंपिन्विपन्नार्तिहारिन् ।
महःस्तोममूर्ते समस्तैकबन्धो
नमस्ते नमस्ते पुनस्ते नमोऽस्तु ॥ ७ ॥
ஜகன்னாத மன்னாத கௌரீஸனாத
ப்ரபன்னானுகம்பின்விபன்னார்திஹாரின் |
மஹ:ஸ்தோமமூர்தே ஸமஸ்தைகபந்தோ
நமஸ்தே நமஸ்தே புனஸ்தே நமோ(அ)ஸ்து || 7 |
जगन्नाथ = உலகனைத்தையும் காக்கின்றவனே मन्नाथ = என்னை ரக்ஷிக்கின்றவனே. गौरीसनाथ = பார்வதீ தேவியுடன் கூடியவனே
प्रपन्नानुकम्पिन् = தஞ்சம் அடைந்தவர்களிடம் கருணை உள்ளவனே .
विपन्नार्तिहारिन् = ஆபத்துக்குட்பட்டவர்களின் துன்பங்களை களைகின்றவனே
महःस्तोममूर्ते = ஒளிகளின் கூட்டத்ததையே உருவமாகக் கொண்டவனே समस्तैकभन्धो = எல்லாவற்றிற்கும் உற்ற உறவினனே . नमस्ते = உனக்கு வணக்கம் ते = உனக்கு पुन = மறுபடியும் नमोऽस्तु = வணக்கம் இருக்கட்டும் .
பரமேஸ்வரன் எல்லா உலகங்களையும் காக்கின்றவன் .அவனே நம்மையும் ரட்சிக்கின்றான் .தயாரூபியான அம்பிகையுடன்
பரமேஸ்வரன் எல்லா உலகங்களையும் காக்கின்றவன் .அவனே நம்மையும் ரட்சிக்கின்றான் .தயாரூபியான அம்பிகையுடன்
கூடியிருப்பதால் அவன் தன்னையண்டியவர்களிடம் தயவு கூர்ந்து அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்குகிறான் . அவனே பரஞ்ஜோதி.அவன்தான் அனைவருக்கும் உறவினன். அவனை நாம் என்றென்றும் வணங்க வேண்டும் .
Thanks to Sringeri Sarada Peetham for the Sanskrit & Tamil text & also to the kumudam Jyodhidam for the photo.
Comments
Post a Comment