Shiva Bhujangam slokam 5 in Sanskrit, Tamil

                                                 || शिव  भुजङ्गम् ||


                        ப்ரவாலப்ரவாஹப்ரபாசோணமர்தம்
                மருத்வந்மணிஸ்ரீமஹஃச்யாமமர்தம் 
                 குணஸ்யூதமேதத்வபுஃ சைவமந்தஃ
             ஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்திஹேதும் ௫   


                                              प्रवालप्रवाहप्रभाशोणमर्धं
                                        मरुत्वन्मणिश्रीमहःश्याममर्धम् ।
                                    गुणस्यूतमेतद्वपुः शैवमन्तः
                                        स्मरामि स्मरापत्तिसंपत्तिहेतुम् ॥ ५ ॥
     प्रवालप्रवाह =  பவழங்களின் பெருக்கினுடைய   प्रभा = ஒளியைப்போல்   शोणं  = சிவந்தது  अर्धं  = பாதி பாகம் मरुत्वन्मणिश्री  =  இந்திரா நீல மணியின் காந்தியைப்போன்ற  महा: श्यामं = ஒளியினால் கருப்பானது अर्धं = பாதி சரீரம் गुणस्यूतं  = குணங்கள் நிறைந்ததும் ( நூலினால் தொடுக்கப்பட்டதும்  )  
स्मरापत्ति = காமனின் அழிவிற்கும்  வளர்ச்சிக்கும் காரணமானதுமான एतत् = இந்த शैवं = சிவபெருமானுடையதான  சரீரத்தை अन्तः  மனதில்  स्मरामि =
தியானம் செய்கின்றேன். 

   இங்கு  சிவபெருமானுடைய  அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபம்
வர்ணிக்கப்படுகிறது.அதில் ஒரு பகுதி ஸ்த்ரீ  ரூபமாயும்
மற்றோர்பகுதி புருஷ ரூபமாயும் விளங்குகின்றது. ஒரு பகுதி  
பவழங்களின் வரிசைபோல் சிவந்த நிறத்தையுடையது.மற்றொன்று  இந்திர  நீலம்போல்  தோற்றமளிக்கின்றது.  இவ்விரண்டும் சேர்ந்திருப்பது மிகவும் மனோஹரமாய்த் திகழ்கின்றது .இவ்வாறு தோன்றும் அர்த்தநாரீஸ்வரர் சிறந்த குணங்களையுடையவர்.இதில் புருஷரூபமான சிவன் காமனை அழித்தவர். தவம் செய்யும்  தன்மேல் மலர்  அம்பை ஏவிய மன்மதனை  சிவன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.பெண் உருவமான அம்பாள் காமனை உயிர்ப்பித்தவள். " कामसन्जीवनी  " (காமசஞ்சீவனீ) என்பது லலிதாத்ரிசதியில் உள்ள   ஓர் நாமா .நெருப்பில் சாம்பலான காமனுக்கு உயிர் கொடுத்து பிழைக்க வைத்தவள்  .   இங்கு गुणस्यूतं என்ற சொல் மிகவும் அழகாக அமைந்திருக்கின்றது. இதனால் மற்றோர் பொருளும் புலப்படுகின்றது. गुणस्यूतं  என்பதற்கு நூலினால் தொடுக்கப்பட்டது என்ற மற்றோர் பொருளும் உண்டு .அர்த்தநாரீஸ்வர ரூபமானது ஓர் ரத்ன மாலை போன்றது.இதில் பவழங்களும்  இந்திர நீல ரத்னங்களும் அமைந்திருக்கின்றன .இந்த ரத்னங்கள் அனைத்தும் சிறந்த நூலால்  தொடுக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான ரத்னமாலையை  நாம் அறிந்து கொண்டால் நமது ஸகல தாபங்களும் நீங்கி விடும் .மேலும் சிவ பக்தர்களாகிய நாம் அவனுடைய திருநாமங்களை ஜபிக்க வேண்டும்.அதற்காக  ஜப மாலையை அணிய வேண்டும். இங்கு பகவானுடைய திவ்ய ஸ்வரூபமே ஓர் ஜபமாலை போல் 
அமைந்து இருப்பது மிகுந்த விசேஷமானது அல்லவா?ஆகையால் அவருடைய இந்த அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபத்தை நம்  மனக்கண் முன்  நிறுத்திக் கொண்டாலே நமது மனோ பீஷ்டங்கள் அனைத்தும் கைகூடும் என்பதில் என்ன ஐயம் ?
Photo courtesy:Dharma Chakkaram  magazine -Sri.Ramakrishna Tapovan, Tirupparaitturai, Tiruchirapalli, Tamil Nadu & bottom photos - Thiruchengode  Temple ,Namakkal Dt ,Tamil Nadu  from Dinamalar Magazine . Thanks to Sringeri Sarada Peetham for Sanskrit & Tamil text.
                                               Ardhanareeswarar



                       

Comments