Shiva Bhujangam slokam 4

 
                                || शिव  भुजङ्गम् ||

                            ஸிவேஸானதத்பூருஷாகோரவாமா-
                  திபி​: பஞ்சபிர்ஹ்ருன்முகை​: ஷட்‌பிரங்கை​: |
               அனௌபம்ய ஷட்‌த்ரிம்ஸதம் தத்த்வவித்யா-
                 மதீதம் பரம் த்வாம் கதம் வேத்தி கோ வா ||  4 ||       


                                  शिवेशानतत्पूरुषाघोरवामा-
                      दिभिः पञ्चभिर्हृन्मुखैः षड्‌भिरङ्गैः ।
                         अनौपंय षट्‌त्रिंशतं तत्त्वविद्या-
                       मतीतं परं त्वां कथं वेत्ति को वा ॥ ४ ॥   

   शिव = சிவன்  ( ஸத்யோஜாதம் ) ईशानं = ஈசானம்  तत्पुरुष = தத்புருஷம் 
   अघोर = அகோரம்  वामादि = வாமதேவம் என்ற पञ्जभि = ஐந்து  முகங்களோடும்    ह्रुन्मुखै = ஹ்ருதயம் முதலான षड्भि ; अङ्गै : ஆறு அங்கங்களோடும்கூடி  
   अनौपभ्य = ஒப்பற்றவரே षट्‌त्रिंशतं = முப்பத்தாறு  तत्वविद्यां  =
தத்துவங்களையும்अतीतं = தாண்டிய परं=சிறந்த  त्वां= உம்மை  को वा= யார் தான் कथं = எப்படி वेत्ति = அறிவான் ?
   
 பரமசிவனுக்கு  ஸத்யோஜாதம் , வாமதேவம் , அகோரம் , தத்புருஷம் ,
ஈசானம் என ஐந்து முகங்கள் .இந்த ஐந்து முகங்களையும் सध्यो जातं     
प्रपद्यामि  என்று  ஆரம்பித்து ईशान सर्व विद्यानां என்று முடிவடைகின்ற    வேத 
மந்திரங்கள் போற்றுகின்றன. ஈசுவரனுக்கு ஆறு அங்கங்கள்.
षड्भिरङ्गै रुपेताय என்பது வேத  வாக்யம் . அவைகளாவன ஸர்வக்ஞதா    ( எல்லாவற்றையும் அறிதல்),திருப்தி,  அனாதி போதம்  ( காரணமில்லாமல் தானாகவே யமைந்துள்ள அறிவு ) ஸ்வாதந்த்ர்யம் 
( பிறற்கு    உட்படாமை ) அலுப்த சக்தி ( அழிவற்ற சக்தி)  அனந்த சக்தி 
(எண்ணற்ற சக்தி ).


"सर्वज्ञता    तृप्तिरनादिबोध ..................शदहुरङ्गानि महेश्वरस्य " மந்திரத்தை ஜபிக்கும் 
பொழுது இந்த ஆறையும் சொல்லி  , ஹிருதயம் , சிரஸ் ,சிகை , கவசம் ,
நேத்ரம் ,அஸ்த்ரம் என்ற ஷடங்கந்யாஸம் செய்வது சம்ப்ரதாயம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவருக்கு இணையாக வேறு யாரையும் 
கூற முடியாது .இவர் 36 தத்வங்களுக்கும் மேற்பட்ட நிலையில் இருப்பதால் இவரை யாரும் எவ்விதத்திலும் அறிந்து கொள்ள முடியாது. 




 Thanks to Sringeri Sharada  peetham for Sanskrit & Tamil text.Photo courtesy Sri .Murugaiyan Thangavel .








  

Comments