Shiva Bhujangam slokam 2


                                        || शिव  भुजङ्गम्  ||
                                        अनाद्यन्तमाद्यं परं तत्त्वमर्थं
                                चिदाकारमेकं तुरीयं त्वमेयम् ।
                                  हरिब्रह्ममृग्यं परब्रह्मरूपं
                               मनोवागतीतं महः शैवमीडे ॥ २ ॥  
                          ||   சிவ புஜங்கம் ||
      அனாத்யந்தமாத்தயம் பரம்  தத்வமர்த்தம் 
         சிதாகாரமேகம்  துரீயம்  த்வமேயம் | 
        ஹரிப்ரஹ்மம்ருக்யம்  பரப்ரஹ்மரூபம் 
             மனோவாகதீதம் மஹ: சைவமீடே ||  
  
   अनाद्यन्तं =ஆதி  அந்தம் இல்லாததும் आद्यं = (  எல்லாவற்றிற்கும் )முதன்மையானதும்   परं =சிறந்ததாயும்   तत्त्वमर्थं = தத்வம்  என்ற மஹா  வாக்யப்  
பொருளாயும்  चिदाकारं = ஞான வடிவமாயும்       एकं  =   
ஒன்றாயும் तुरीयं = நான்காவதாயும் तु =  ஆனாலும்   
अमेयं = அறிய முடியாததாயும்  हरिब्रह्ममृग्यं =  விஷ்ணுவினாலும் 
பிரமனாலும் தேடத்தகுந்ததாயும் परब्रह्मरूपं= பரப்ரும்ம 
ஸ்வரூபமாயும் मनोवागतीतं = மன , வாக்கிற்கு                      
எட்டாததாயும் இருக்கின்ற शैवं मह : சிவ சம்பந்தமான  
ஜ்யோதியை ईडे = துதிக்கின்றேன். 

இங்கு சிவபெருமானுடைய நிராகரமான ஸ்வரூபம் 
வர்ணிக்கப் படுகின்றது .அவர் ஆதியும்  அந்தமும் 
அற்றவர் .அவருக்கு  முன் யாரும் இருந்தது  கிடையாது
ஆகையால்  அவர் பிறப்பற்றவர்.எது  பிறக்கின்றதோ 
அது நாசத்தை அடைகின்றது. சிவபெருமான் பிறப்பற்ற
 வராக  இருப்பதால் அவருக்கு  இறப்பும்  கிடையாது .   
அவர்தான் ஆதி புருஷன்.  ஆதலால்  எல்லோரைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறார் . " தத்வமஸி " என்ற 
மஹாவாக்யத்திலுள்ள "தத் " பதத்திற்கும்  " த்வம் " என்ற 
பதத்திற்கும் லக்ஷ்யமாக இருப்பவர். சைதன்யம் (அறிவு) 
ஆகிய  ஸ்வரூபம் .அவர் ஒருவர்தான் உண்மைப் பொருள்.
ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் என்ற முத்தொழில்களையும் 
செய்யும் ப்ரஹ்மா, விஷ்ணு ,ருத்ரன்   என்ற மும்மூர்த்திகளுக்கும் அப்பால் நான்காவது தத்துவமாக 
விளங்குகிறவரும் அவரே .மேலும் ஜாக்ரதை,ஸ்வப்னம் 
ஸுஷுப்தி  என்ற மூன்று நிலைகளையும் கடந்து நான்காவதான துரீயாவஸ்தையில் நிலைத்து நிற்கின்றவரும் அவரே. இவ்வாறு அனைத்தையும் கடந்து 
நிற்பதால் அவரது ஸ்வரூபத்தை அளவிட முடியாது .அது 
மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதது .பிரம்மாவும் , விஷ்ணுவும் அவரது தோற்றத்தை அளவிட எண்ணி ஆகாயத்தையும் ,பாதாளத்தையும் நோக்கிச் சென்றனர்.
ஆனால் அவர்களால் சிவபெருமானுடைய அடியையம் ,முடியையும் கண்டு பிடிக்க முடிய வில்லை ,இவ்வாறு 
இருக்க அவரது உண்மை ஸ்வரூபத்தை யார்தான் அளவிட முடியும் ?அவரே பர பிரம்மம். यतो वाचो  निवर्तन्ते अप्राप्य मनसा 
सह  என்று தைத்திரீயோபனிஷதம் ( 2 - 4 )என்று குறிப்பிடுகின்றது .உள்ளத்துணர்ச்சியில்  கொள்ளவும் 
படாஅன் , கண் முதல்  புலனாற் காட்சியும் இல்லோன் என்ற திருவாசக பாடல் வரிகளை நினைவு கொள்வோம்.
(அந்தக் கரணங்களாகிய   மனம் புத்தி ஆகியவைகளுக்கு 
ஈசன் எட்டாதவன் .புறக்கரணங்களாகிய கண் , காது முதலியவைகளைக் கொண்டும் அவனை அறிந்து கொள்ள முடியாது) .இவ்வாறான ஓர் ஜோதியை நாம் 
போற்ற வேண்டும் .


  
  Slokam Sanskrit text With thanks to Sringeri Peetham.Photo courtesy Sri,Ramakrishna Mutt publications- Mylapore ,Chennai. Thaitrionipashad & Thiruvasakam meaning by Swami Chitbavananda- Tirupparaiturai Tapovan founder.
    






         

Comments