भुक्ति मुक्ति दायकं प्रशस्त चारुविग्रहं
भक्तवत्सलं स्थिरं समस्तलोकविग्रहम् |
निक्वणन्मनोज्ञ हेमकिङ्किणी लसत्कठिं
काशिकापुराधिनाथ कालभैरवं भजे ||
புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்தலோக விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் சமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஞ ஹேம கிங்கிணி லஸத்கடிம்
காஸி காபுராதிநாத காலபைரவம் பஜே .
भुक्ति मुक्ति दायकं = போகத்தையும் மோக்ஷத்தையும் தருபவரும்
प्रशस्त= சிறந்த चारु = அழகிய , विग्रहं = சரீரமுள்ளவரும் ,
भक्तवत्सलं= பக்தர்களிடம் வாத்ஸல்யமுள்ளவரும், स्थिरं =
நிலைத்திருப்பவரும், समस्तलोकविग्रहम् = எல்லா உலகங்களையும்
சரீரமாகக் கொண்டவரும் ,निक्वणन्मनोज्ञ= ஒலிக்கின்ற அழகிய
हेमकिङ्किणी= தங்கச்சலங்கைகளுடன், लसत् = விளங்கும்,
कटिं = இடுப்பைஉடையவருமான, काशिकापुराधिनाथ=
காசிநகரத்தின் அதிபதியான , कालभैरवं= காலபைரவரை ,
भजे=பஜிக்கிறேன் .
இவ்வுலகிலும் மேலுலகிலும் போகங்களையும் மோக்ஷத்தையும்
அளிப்பவர் . மிகச் சிறந்ததும் அழகியதுமான சரீரமுள்ளவர்.
பக்தர்களிடம் அன்பு கொண்டவர்.நிலைத்திருப்பவர். எல்லா
உலகங்களையும் சரீரமாகக் கொண்டவர் .இடுப்பில் ஒலிக்கும்
அழகிய தங்கச் சலங்கைகளுடன் கூடிய அரைஞாண் கட்டிக்
கொண்டிருக்கிறார்.இந்த காசிநகராதிபதியான காலபைரவரை
பஜிக்கிறேன் .
All the pleasures enjoyed in this world & heaven,including liberation from this world is
granted by Him.He has the best & beautiful body.He is showing His love towards
his devotees always.He is everlasting. The whole universe is His body.He wears golden
ornaments in his hip which is giving a ringing sound.I worship this Chieftain of this city
of Kasi.
Comments
Post a Comment