Kalabairavastakam Slokam 8

                                       भूतसङ्घनायकं विशालकीर्तिदायकं
                                      काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् |
                                      नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
                                       काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥ ८॥

                                பூதஸங்கனாயகம் விஸாலகீர்திதாயகம்
                                காஸிவாஸலோகபுண்யபாபஸோதகம் விபும் |
                                  நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
                                 காஸிகாபுராதினாதகாலபைரவம் பஜே ||  8
     
       भूतसङ्घनायकं= பூதக்கூட்டங்களின்   தலைவரும்  विशालकीर्तिदायकं =  
 
  விஸ்தாரமான  கீர்தியைத்தருபவரும் , काशिवासि ,  காசீ  க்ஷேத்திரத்தில்


  வசிக்கின்ற ,लोक = ஜனங்களின் ,पुण्यपाप = புண்ய பாபங்களை , शोधकं  =

சோதிப்பவரும் , विभुं  = வியாபகரும்,नीतिमार्गकोविदं = நியாய வழியை நன்கு 

அறிந்தவரும் ,पुरातनं= பழமையானவரும் , जगत्पतिं = உலகங்களின் 

தலைவருமான ,काशिकापुराधि नाथ = காசீ நகராதிபதியான , कालभैरवं  =

காலபைரவரை , भजे = பஜிக்கிறேன் .


பூதகணங்களுக்குத்  தலைவர் ,பக்தர்களுக்கு  விஸ்தாரமான  புகழைத் 

தருபவர்.காசீ க்ஷேத்திரத்தில் வசிக்கும் ஜனங்களின்  புண்யங்களையும் 

பாபங்களையும் சோதிப்பவர்.தான்யங்களை சல்லடையைக்  கொண்டு  

சலித்தால் அஸாரமான   அம்சங்களை மட்டும் நீக்கிவிட்டு ஸாரமான   

அம்சங்களை மிஞ்சச் செய்கிறது . இது போல் பாபங்களையெல்லாம்  

நீக்கி புண்யத்தை மட்டும் மிஞ்சச் செய்கிறார் . எங்கும்      வியாபித்  

திருப்பவர் . நியாய முறைகளை நன்கு அறிந்தவர் .எல்லாவற்றிற்கும்  

முன்னால் இருப்பவர் . உலகங்களுக்கெல்லாம் தலைவர் . இந்த  காசி   

மாநகராதிபதியான கால பைரவரை பூஜிக்கிறேன் .


He is the commander of Bhutha ganas( ghost soldiers) which destroys evil forces.He bestows  


his  devotees with limitless fame.He verifies  the good & bad deeds of people in Kasi. He 

cleans & disposes  sins  like filter which removes unwanted things.He exists everywhere  & 

knows the righteous path very well.He comes first to the rescue of his devotees.He is the chief of

universe.I worship this chieftain of the city of Kasi.

                                       Photo courtesy :Kumudam Jothidam.


Comments