Dakshinamurthy Stotram | Dakshinamurthy Mantra 17

                                                      श्री  दक्षिणामूर्ति   स्तोत्रम्  17
     

व्यालम्भिनीभी परितो जटाभि कलावशेषेण कलाधरेण | पश्यल्ल लाटेन  मुखेन्दुना  च  प्रकाशसे  चेतसि निर्मलानाम् ||

வ்யாலம்பிநீபி  பரிதோ ஜடாபி :கலாவஸேஷேண  கலா  தரேண|  பஸ்யல்லலாடேந  முகேந்துநா  ச பிரகாஸஸே  சேதஸி நிர்மலாநாம் ||

 परिता- சுற்றிலும்व्यालम्भिनीभी-தொங்குகின்ற, जटाभि- சடைகளோடும்,कलावशेषेण - ஓர் பிறையினால் மட்டும் எஞ்சியுள்ள, कलाधरेण-சந்திரனோடும், पश्यल्ल लाटेन - நெற்றிக்கண்ணுடன் கூடிய मुखेन्दुना  च - சந்திரன்  போன்ற முகத்துடனும் ,निर्मलानाम् -மாசற்றவர்களுடைய ,चेतसि -மனதில், प्रकाशसे - விளங்குகின்றீர் . 

தக்ஷிணாமூர்த்தி தன்னை  த்யானம்    செய்கின்றவர்களுடைய  மனதில் தோற்றமளிக்கின்றார்.அவர்கள்   தங்கள் புண்யகர்மாக்களால்  மனதில் உள்ள காமம் முதலான எல்லா அழுக்குகளையும் அகற்றித்  தங்களுடைய  மனதைப்  பரிசுத்தமாக  வைத்திருக்கிறார்கள்.  ஆதலால் அவர்களுடைய மனது ஓர் மாசற்ற கண்ணாடிபோல்  ஆகி விடுகின்றது.அப்பொழுது  தக்ஷிணாமூர்த்தியின் ஸ்வரூபம் அவர்களது  மனதில் பிரதிபலிக்கின்றது . அது  சமயம்  அவர் சடைமுடி  தரித்தவராயும்,பிறைச்சந்திரனைத்  தனது தலையில் தாங்கியவராயும்   நெற்றிக்கண்ணைக்  கொண்டவராயும், மதிவதனமுடையவராயும் காட்சியளிக்கின்றார். 










Comments