Dakshinamurthy Stotram | Dakshinamurthy Mantra ( 16 )

                                                श्री दक्षिणामूर्ति  स्तोत्रम् 

           


मुदिताय  मुग्ध  शशिनावतंसिने  भसितावलेप रमणीय मूर्तये |  जगदिन्द्रजाल रचना पटीयसे महसे नमोSस्तु  वटमूलवासिने  ||

முதிதாய முக்த ஸஸிநாவதம்ஸிநே பஸிதாவலேப ரமணீய மூர்த்தயே |   ஜகதிந்திரஜால ரசநா  படீயஸே மஹஸே நமோSஸ்து ||    

मुदिताय - மகிழ்ச்சி உடையவராயும், मुग्ध  शशिनावतंसिने - அழகிய சந்திரனை அணிகலனாகக் கொண்டவராயும்,  भसितावलेप - விபூதியைப் பூசிக் கொண்டிருப்பதால், रमणीय मूर्तये - மனதைக்கவரும் தோற்றத்தை உடையவராயும், जगदिन्द्रजाल - இவ்வுலகமெனும் மாயையை, रचना पटीयसे -உண்டு பண்ணுவதில் ஸாமர்த்தியமுடையவராயும், वटमूलवासिने- ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பவராயும், महसे - ஜ்யோதி ஸ்வரூபியாயும் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு ,नम - வணக்கம் ,अस्तु - இருக்கட்டும்.

தக்ஷிணாமூர்த்தி எப்பொழுதும் ஆனந்தத்துடன் விளங்குபவர்."मुदितवदनं  दक्षिणामूर्तिमीडे "  என்று மற்றோர் இடத்தில் காணப்படுகிறது. அவர் தனது சடைமுடியில் பிறைச்சந்திரனை அணிகலமாகத் தரித்துக் கொண்டுள்ளார். அவர் தனது உடலை விபூதியினால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.அவர் ஒரு சிறந்த மாயாவி .  அவர்  தன்னுடைய  மாயையினால்  இவ்வுலகத்தைப் படைத்திருக்கிறார். அவர் தேஜோ மயமானவர் .அவர் தன்னை அண்டும் பக்தர்களுக்கு ஆன்ம அறிவை அளிக்கும் பொருட்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கின்றார் .அவ்வாறு விளங்கும் தக்ஷிணாமூர்த்திக்கு  வணக்கம் செலுத்த  நாம் கடமைப்பட்டுள்ளோம்.

  இங்கு  இவ்வுலகு ஓர் மாயமயமான படைப்பு என்று கூறப்பட்டுள்ளது .இது " ब्रह् म  सत्यं  जगन्मिथ्या " என்ற தத்துவத்தைக் காட்டுகின்றது .பரப்ரம்மம்  ஒன்றுதான் உண்மைப்பொருள்.இவ்வுலகம்  நம் கண் முன் இருப்பது
போல் தோன்றினும் உண்மையில் இதற்கு அஸ்தித்வம்  என்பது கிடையாது .அதாவது இது ஓர் ஜாலம் - சொப்படி வித்யை .சொப்படி வித்தைக்காரன் தன்னுடைய சாமர்த்யத்தால் பல  பொருள்களை நம் கண் முன் கொண்டுவந்து   காட்டுகிறான். ஆனால்அவைகள் உடனேயே மறைந்து விடுகின்றன.அவைகள் உண்மைப்பொருள்கள் அல்ல. அது போலவே  தக்ஷிணாமூர்த்தியும்   மிகுந்த சாமர்த்யம் வாய்ந்த ஓர்  ஜாலவித்தைக்காரன். தனது  மாயா  சக்தியினால் இவ்வுலகத்தைப் படைத்து விடுகின்றான். ஆனால் இவை அனைத்தும் மித்யை. நிலையற்றவை. உண்மைப்பொருள் ஒன்றுதான்.அதையறிந்தால்தான்  நாம்  இந்த உலகப்பற்றையறுத்து மோக்ஷத்தை   அடையலாமென்று போதிப்பதற்காக ஆலமரத்தடியில் அவர் அமர்ந்திருக்கிறார். 








Comments