श्री दक्षिणामूर्त स्तोत्रम् ( 13 )
कांंत्या निन्दित कुन्द कन्दल वपु र्न्यग्रो धमूले वसन्कारुण्यामृतवारिभिर्मुनिजनं सम्भा वयन्वीक्षितै : |
मोहधवांत विभेदनं विरच यन्बोधेन तत्ता धृशा देवस्त त्त्व मसीति बोधयतु मां मुद्रावता पाणिना ||
காந்த்யா நிந்தித குந்த கந்தல வபுர் ந்யக்ரோ தமூலே வஸன்
காருண்யாம்ருதவாரிபிர் முநிஜனம் ஸம்பாவயன் வீக்ஷிதை :|
மோஹத்வாந்த விபேதனம் விரசயன் போதேந தத்தாத்ருஸா
தேவஸ்த த்வமஸீதி போதயது மாம் முத்ராவதா பாணிநா||
कांंत्या - அழகினால் ,निन्दित - பழிக்கப்பட்ட , कुन्द कन्दल वपु - புதிய மல்லி அரும்பை உடைய சரீரமுள்ளவரும் न्यग्रोधमूले - ஆலமரத்தடியில்,वसन् - வசித்துக்கொண்டு, कारुन्यामृत वारिभि - தயை என்னும் அமுத நீர் நிரம்பிய , वीक्षितै - பார்வைகளால்,मुनिजनं - முனிவர்களை , सम्भावयन् - அருளிக்கொண்டும் तत्ता धृशा- அப்படிப்பட்ட , बोधेन - ஆத்ம ஞானத்தினால் मोहधवांत विभेदनं- மோஹமென்னும் இருட்டைப் பிளத்தலை ,विरचयन् - செய்து கொண்டும் இருக்கின்ற देव - தக்ஷிணாமூர்த்தி, मुद्रावता - சின்முத்திரையுடன் கூடிய पाणिना - கையால் मां - என்னை ,तत्वमसि நீ பரம்பொருளாய் இருக்கிறாய்,इति - என்று , बोधयतु - அறிவு பெறச் செய்யட்டும்.
தக்ஷிணாமூர்த்தி மிகுந்த அழகு வாய்ந்தவர் .அவரது திருமேனியின் காந்தி வெண்ணிறம் பொருந்திய மல்லிகையை இகழும் தன்மை வாய்ந்தது. அவர் தன்னைச் சாரும் மாமுனிவர்கள் அனைவரையும் பாராட்டிக்கொண்டு ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்.இரக்கத்துடன் கூடிய அவர் பார்வைகள் முனிவர்கள் மீது விழுகின்றன.அவைகள் அமுதத்தின் திவலைகளையே முனிவர்கள்
மீது வாரி வீசுவதுபோல் காணப்படுகின்றன.அவர் ஆத்ம ஞான உபதேசத்தால் மோஹமெனும் இருளை நீக்குகின்றார் .அவ்வாறு காட்சி தரும் தக்ஷிணா மூர்த்தி சின் முத்திரையுடன் கூடிய தனது திருக்கரத்தால் தத்வமஸி என்ற மஹா வாக்யார்த்தமான ஜீவ ப்ரஹ்மைக்ய ஞானம்
ஏற்படும்படி அருள் செய்யட்டும் .
Very nice slogam...thanks
ReplyDeleteVery nice slogam...thanks
ReplyDeleteThank you.
ReplyDelete