Thirupugal - Nalirandhizhale kolia - Part 2.

நாம்  முன்னர்  பார்த்த "நாலிரண்டிதழாலே    கோலிய "என்ற திருப்புகழின் அடுத்த பகுதியை  இப்பொழுது  பார்ப்போம்.(குண்டலினி  சக்ர  விளக்கமாக  முன்னர் வந்தது  இப்பாடலின் முதல் பகுதி)                                                                                                                                                                                                                                                                 ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிய
          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவ
          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரச பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி

காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே                                                                                                                                                                                                                           இப்பகுதியில்  சக்தியின்  நாமங்களை எவ்வளவு  அழகாகப்   பாடியுள்ளார்  நமது   அருணை  முனிவர்  அருணகிரியார் .                                                                                                              விடத்தைக்  கண்டத்தில்( throat)வைத்திருப்பவள்,ஆடம்பரமயிருக்கும் துர்க்கை, என்றும் இளமையாக   யிருப்பவள் ,பொன்னிறமானவள்,பல இடங்களிலும் இருப்பவள், மோகமற்றவள் ,என்றும் சுமங்கிலி,அனைத்து உலகங்களையும் படைத்து  காப்பவள் ,எல்லாவுயிர்களி டத்திலும் இருப்பதாகியப்  பெருமையை உடையவள்,அன்னை துர்க்கை ,அனைத்துக்கும்  மூலமாக இருக்கும் ஆதிசக்தி ,அனைத்துலகையும் அறிந்த ஞான  நடராஜர்  ஆடும்  பொன்னம்பலத்தை விரும்பும்  அழகியே,காலனை சம்ஹரித்தவளே( சிவன் இடது காலால் எமனை உதைத்தார். அர்த்தநாரி  சொருபத்தில் இடது  கால் சக்தியினுடையது)மிகத் தூய்மையானவள்,திரிசூலமேந்தியவள், நல்ல வேத மந்திரச் சொற்களை  மொழியாகக் கொண்டவள் ,கறுத்த கழுத்தையுடையவள் ,கபாலத்தை ஏந்தியவள்,மாலையணிந்தவள்,காம தந்திர லீலைகளை  உலகில் நடத்தி  வைப்பவள் , சக்தி உபாசனை பற்றி  கூறும் நூல்களால் ஆராயப்பட்டவள் ,சிவகாம சுந்தரியின் வாழ்வே. இப்பாடலை  பூஜை  அறையில்  தூப தீபம் காட்டும் பொழுது,மற்றும்  திருக்கோயில்களில் பூஜை நேரத்திலும் பாடுவது  மிகவும் நன்மை பயக்கும்.                                   

Comments