Puja , worship in temple & home 3.

After passing through Raja Gopura tower ,we first see "Bali Peeta"(பலி பீடம்). We should prostrate before this facing north direction.Ashtanga namaskar(ashta means eight & anga -body) should be performed by male devotees.feet (2), knees(2) ,palms(2),chest & forehead touching the  earth.The mindset is very important during performing this.Just falling down is not the required one.one should shed  away  all evil thoughts in the mind(all the unwanted worldly desires like anger,greed & lust are killed in the bali peeta.All the unwanted thoughts in the mind has fallen down there.When the devotee gets up,he should  have only good thoughts.A man with animal like behaviour  has ended there & a  man with noble thoughts is getting up there.The strong thinking of this  makes him as if he takes  a new birth with good qualities.He should turn this  towards God.Ladies should perform "panchanga  namaskar",both knees,palms &fore head touching the ground.Next he sees the "Dhwaja Sthambam" or flag column,flag pointing towards God in the temple.Next, he sees  a vahana,which is looking toward  God.Nandi(bull) for Siva,Lion or Simha for Goddess & Peacock for Muruga.This vahana denotes the individual or "jeevatma" always facing God.It explains that mind should always concentrate thinking of God to reach him.Then he enters &go around the" Main  Deity " in the "karpa gruha"(கருவறை)  from the right side to the left side.(வலம் வருதல்).                                                                                                                                                                                                                                                                                                          After performing "pradhakshinai"(வலப்புறத்திலிருந்து  சுவாமியை சுற்றி வந்து இடப்புறமாக  வெளியே  வந்து  வலப்புறத்தில்  நின்று)devotee should stand before God . He sees a dark room where   the God is seated.No light & No windows for air circulation.This is similar to our human heart,where there is no light.A screen is hiding the Sannidhi.Devotee is waiting for the screen to  be removed to see God.He hears the sound of bell.He is sure of seeing the Deity soon.Screen is removed.Camphor light(கற்பூர  ஆராதனை)    is shown by the priest. Devotee looks at the Deity in that light.Devotee does n't see it as mere Deity,he feels as if God himself is present there.This is the outside vision,which he should take into his  mind.Gradually he looks towards inside his mind.By concentrating on this,the screen of ignorance  hiding The God inside him is removed.He sees God as Divine Light inside him.What are all seen  out side the temple,is now with  in himself.We should thank many times our saints,who made this possible.We should also thank our previous Kings & Great sculptors who constructed these great temples where there were no heavy duty cranes or computers to  design these  temples.                                                                                                                                                                                                  ராஜ கோபுரத்தைக் கடந்து  உள்ளே  நுழைந்தால் பக்தன்  முதலில்  காண்பது பலி பீடத்தை .அங்கே வடக்குத் திசையை  நோக்கி நமது  உடலின் எட்டு பாகங்களும் தரையில் படுமாறு     வீழ்ந்து அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய  வேண்டும்(  பாதம் 2,முழங்கால் 2,உள்ளங் கைகள் 2,மார்பு ,மற்றும் நெற்றி ).வெறுமனே  வீழ்ந்து வணங்குவதில்  எந்த  நலனும்  கிடைக்கப் போவதில்லை.அப்படி வணங்குகையில், தனது கீழான இயல்புகள் எல்லாம் அந்த இடத்திலேயே பலி கொடுக்கப் பட்டு விட்டன. இனி அவை தலையெடுக்காது என்று ஆழ்ந்து எண்ண  வேண்டும். மேலான எண்ணங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று என்ன வேண்டும். விலங்குத் தன்மை வாய்ந்த மனிதன் கீழே வீழ்ந்து மாய்ந்து  போய் விட்டான் ;மனிதத் தன்மை வாய்ந்த மனிதன் எழுந்திருக்கிறான் என்ற எண்ணம் அவனுள்ளே ஆழ்ந்து பதிகின்றது .  இது  அவன்  புதிய  பிறவி எடுத்தததற்கு சமமாகிறது. இந்த மேலான மனப்பான்மையைத் தெய்வதிற்குரியதாக மாற்றி  விட வேண்டும் . அடுத்து  அவன் பார்ப்பது  துவஜ ஸ்தம்பம் (கொடிக்கம்பம்).கொடி உள்முகமாக திரும்பி  இருக்கிறது. கோயிலைச்  சுற்றி நடக்கையில் உள்ளிருக்கும்  தெய்வம்   தனது வலக்கைப் பக்கம் இருக்குமாறு பக்தன் பார்த்துக் கொள்கிறான்.இதற்குப்  பெயர்தான்  வலம் வருதல்.                                                                                                                                                                                                              இனி  அடுத்ததாக   வாகனத்தைப்  பார்க்கிறான். சிவனுக்கு  நந்தி வாகனம்.  பெருமாளுக்கு கருடன்,அம்பாளுக்கு சிங்கம்,இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு  வாஹனம்.இந்த வாகனம்  நம்மை(ஜீவான்மாவை )  குறிக்கிறது. எந்த  வாகனமயிருந்தாலும்  அது கடவுளை நோக்கியிருக்கும்.கடவுளைச்  சென்றடைய .வேண்டியது ஜீவன்மாவின் குறிக்கோள். கடவுளைச் சென்றடைவதற்கு எப்பொழுதும் மனம் கடவுள் நாட்டத்திலேயே இருக்க வேண்டும்  என்னும் தத்துவத்தை வாகனம் விளக்குகிறது.அடுத்ததாக கர்ப்பகிருகத்தைப்  பார்க்கிறான். மிகவும் இருட்டாக இருக்கிறது.காற்று புகுவதிற்கும் வழியில்லை.இது  நமது உடலின்  புறச் சின்னத்தைக்  காட்டுகிறது.நமது நெஞ்சத்தினுள்ளும்  கண்  மூடியிருக்கும் போது   காரிருளைதான்  காண்கிறோம்.கர்ப்ப  கிருகத்தைத்  திரையிட்டு மூடியிருக்கிறார்கள் .                                                                                                                                                                                                                                                                                              சிறிது நேரத்தில் மணியோசை   கேட்கிறது. விரைவில் தரிசனம் கிடைக்கும் என்று  பக்தனுக்கு நம்பிக்கை  உண்டாகுகிறது.திரை விலகுகிறது.உள்ளே கற்பூர ஆராதனை  காட்டப் படுகிறது.விக்ரகத்தைத தரிசிக்கிறான். அதனை வெறும் விக்ராகமாக அவன்  மனது  எண்ண வில்லை.தெய்வத்தையே அங்கு காண்கிறான். மனத்தில்  நிகழ  வேண்டிய    காட்சி இது . நாளடைவில் கோயிலில்  உள்ள   தெய்வம்  தன்னுள்ளேயே   உறைவதை  உணர ஆரம்பிக்கிறான்.இவ்வாறு.அந்த  காலதிலேயே முனிவர்களும்,சித்தர்களும்  ஆகம  சாத்திர   விதிப்படி ஆலயங்கள் கட்ட   உதவியிருக்கின்றனர் .முற்கால  பேரரசர்களும், சிற்ப  சாஸ்திர வல்லுனர்களும் இத்தகைய பெரிய கோயில்களை  நாம்  வழிபட்டு  கடவுளை அடைய வழி காட்டியுள்ளனர் .நினைத்துப் பாருங்கள். கணக்கிட்டு  நிர்மாணிக்க எந்த கணினியும் இல்லை.எவ்விதமான  பளு தூக்கும் இயந்திரங்களும் இல்லை. கனரக வகனங்களும் இல்லை.ஆகையால் இவர்களுக்கு நாம் நன்றி     செலுத்துவோம் .   

Comments