கபாலம், தண்டுவடம், பிறப்புறுப்பு ( genitals) இவை மூன்றும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதில் பிறப்புறுப்பிலிருந்து இடகலை( left side) ,பிங்கலை(right side) என்று இரண்டு நாடிகள்( two separate nervous tube conduits)பாம்பு இரண்டு ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு செங்குத்தாக நிற்பது போன்று தண்டுவடம்(முதுகு தண்டு)வழியாக மேலே ஏறி கபாலத்தை அடைகிறது.இவ்விரண்டு நாடிகளுக்கு நடுவில் சுழுமுனை என்று ஒரு நாடி கீழிருந்து எழும்பி மேலே சென்று கபாலத்தை அடைகிறது. சாதாரணமாக நீங்கள் ஒரு விரலை மூக்கு துவாரத்தின் அருகில் கொண்டு சென்றீர்களானால் ஒரு துவாரத்தின் வழியாக மட்டும் மூச்சுக் காற்று செல்வது தெரியும்.இடது துவாரத்தின் வழியாக சுவாசம் சென்றால் " இடகலை" என்றும் ,வலது நாசி துவாரம் வழியாகச் சென்றால் " பிங்கலை" என்றும் கூறுவர் . இரண்டு துவாரத்திலும் ஒரே நேரத்தில் சுவாசம் சென்றால் அந்த நாடிக்கு " சுழு முனை " என்று பெயர்.சாதாரண நிலையில் ( யோக மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதவர்களுக்கு)எப்பொழுதாவது தான் சுழுமுனை கூடும்.ஞானிகளுக்கு அடிக்கடி சுழுமுனை கூடும்.சித்தர்கள் எந்தெந்த நாடி ஓடுகையில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 1.நாலிரண்டாலே................கோலாகாலனும் .சுவாதிட்டானம் . பிரமன் . 2.ஞாலம் உண்ட பிராணாதாரனும் .......... மணிபூரகம் ............... திருமால் 3,யோக மந்திர மூலா தாரனும்......................அனாகதம் ..................ருத்ரன் 4.நாடிநின்ற ப்ரபாவாகாரனும் நடுவாக .... ஆக்ஞா ..................சதாசிவன் 5.மேல் இருந்த கிரீடா பீடமும் ....மணீ மா மாடமும் ..........சிவ சக்தி வீர பண்டிதனே. வீர குருமூர்த்தியே .எனது வினைகளைத் தீர்த்து அருள்வாய். ஆரம்பத்தில் ஓங்கார வடிவினரான வினாயகர் " ஒம் " அட்டவணையில் உள்ள மந்திர எழுத்தின் கீழ் பார்த்தீர்களானால் "ஓம் நமசிவய" என்ற பஞ்சாட்சரம் தெரிய வரும். பக்திமார்கத்தில் சென்றாலும் இறுதியில் யோக மார்கத்தை இறைவன் அருளுவான் .புலனடக்கம்.சத்தியம்,சாத்விக உணவு.பிறன் மனை விழையாமை , ஜீவகாருண்யம், சினந்தவிர்த்தல் . எல்லாவுயிரிலும் இறைவனே இருப்பதை உணர்தல் இவைகளை கடைபிடித்தால் மட்டுமே இந்த யோக நிலைக்கு நாம் தகுதி பெறுவோம்.
Comments
Post a Comment