Kundalini chakra in Thirupugal - 1

நாலி ரண்டித ழாலே கோலிய
     ஞால முண்டக மேலே தானிள
          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே

ஞால முண்டபி ராணா தாரனும்
     யோக மந்திர மூலா தாரனு
          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக

மேலி ருந்தகி ரீடா பீடமு
     நூல றிந்தம ணீமா மாடமு
          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக

வீசி நின்றுள தூபா தீபவி
     சால மண்டப மீதே யேறிய

          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்                                                                                                                                                                                                               மேலே   உள்ள  திருப்புகழில் அருணகிரியார்   நமது உடலில் எப்படி யோக அல்லது  குண்டலினி சக்தி  ஆதரங்களிலி ருந்து  மேலே எழும்பி ஓவ்வொரு ஆதாரத்தையும் கடந்து  எப்படி நமது சிரசில் உள்ள சஹஸ்ராரம் என்று சொல்லபடுகிற ஆயிரம் இதழ்  தாமரையில்   எப்படி ஐக்கியமாகின்றது  என்பதை மிக அழகாகக்  கூறுகிறார்.அவர்  முருகக்  கடவுளின் மீது கொண்ட அளவிட முடியாத அன்பினால்(காதலால்) பக்தி மார்க்கத்தில் ஆயிரக்கணக்கான   தெய்வ மணங்கமழும் பாடல்களால் தமிழகம்  மற்றும் வெளி மாநிலங்கள்,கண்டி ,கதிர்காமம் போன்ற  இலங்கையில் உள்ள தலங்களுக்கும் 600 ஆண்டுகளுக்கு  முன்னர்  கால் நடையாகவே  சென்று  முருகன் திருப்புகழைப் பரப்பியுள்ளார்.நம்மைப்  போன்ற சாதாரண  நிலையில் உள்ளவர்களும் முருகனை (இறைவனை) உணர வழி காட்டியுள்ளார். நாமும் நமது குடும்பத்தில் உள்ளவர்களும் ,முக்கியமாக இல்லறவாழ்வில் வாழ்பவர்கள் கடைத்தேற வழி  காட்டியுள்ளார்.இவற்றில் ஒரு சிலத்  திருப்புகழ்களையவது நாம் கற்று  பாடி வரலாம்.இது தமிழ் மந்திரம்.எதுகை,மோனையுடன் கூடிய சந்தப் பாடல்கள்.இவருக்குப் பின்னால்வந்த   வள்ளலார், தாயுமானவர்  போன்றவர்களும்  அருணகிரியாரின் திருப்புகழையும்,அருணகிரியரையும் போற்றித் தமது பாடல்களில் பாடியுள்ளனர் . இந்தப்  பாடல் விளக்கத்தை  அடுத்த பதிவில்தருகிறேன்.தங்களுக்கு இந்த செய்திகள் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .இது பற்றிய தங்கள்  கருத்துகளை வரவேற்கிறேன்.         

Comments