Skip to main content
Bhagavat Geetha(five holy deeds)
- மனிதனாய் இவ்வுலகில் பிறந்த அனைவரும் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாக இறைவன் நமக்கு வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் மூலம் தெளிவாகக் கூறியுள்ளான். தன்னலம் கருதாத செயல் ,தியாக உணர்வோடு செய்யும் சேவை ,உலகின் நன்மைக்கேன்றே செய்யப்படும் சேவை,மக்களுக்கு சேவை செய்வதையே கடவுளுக்கு செய்யும் தொண்டாக எண்ணுதல் இவை யாவும் யக்ஞம் அல்லது யாகம் என்று அழைக்கப் படுகிறது. 1.தேவயக்ஞம்:கடவுள் வழிபாடு இல்லாது ஒரு நாளும் இருக்கக் கூடாது.நாம் விரும்பும் கடவுளை முறைப்படி நாள்தோறும் வாழ்த்தி வணங்க வேண்டும். 2.ரிஷி யக்ஞம்:உலக நன்மையின் பொருட்டு சிறந்த சாஸ்திர நூல்களை சான்றோர்கள் இயற்றி வைத்துள்ளனர். அவற்றை நாம் முறையாகக் கற்று,மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லவேண்டும்.இப்படிச் செய்வது நாம் அவர்களைப் போற்றி வணங்குவதற்கு சமமாகும், 3.பித்ரு யக்ஞம்: நம் முன்னோர்கள் (தாத்தா ,பாட்டி ,தாய், தந்தையர் மற்றும் அவர்களுக்கும் முன்னே உள்ளவர்கள் ) அனைவருக்கும் நாம் கடமைப் பட்டவர்கள் ஆகிறோம். அவர்கள் எவ்வுலகில்( இறந்த பின் இருக்கும் நிலை ) இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாள் தோறும் நினைத்து வணங்கி வரவேண்டும்.பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு செய்யும் சேவையும் இதில் அடங்கும். 4.நர யக்ஞம்: மக்களின் பசிப் பிணியைப் போக்குதல், கல்வி அளித்தல், நோய் நீக்குதல்,ஏழைகளுக்கு உணவளித்தல் போன்றவை. 5.பூதயக்ஞம்:ஆடு, மாடு குதிரை, நாய் போன்ற மனிதர்களுக்கு உதவி செய்யும் விலங்கினங்களை பாதுகாத்தல். பகவத் கீதையில் மூன்றாம் அதிகாரத்தில் இது பற்றி பகவான் கிருஷ்ணன் விளக்கிக் கூறியுள்ளார் .
Comments
Post a Comment