Shiva Bhujangam slokam 14

                                 


                                      स्तुतिं ध्यानमर्चां यथावद्विधातुं
                               भजन्नप्यजानन्महेशावलंबे ।
                                त्रसन्तं सुतं त्रातुमग्रे मृकण्डो
                             र्यमप्राणनिर्वापणं त्वत्पदाब्जम् ॥

                    ஸ்துதிம் த்யானமர்சாம் யதாவத்விதாதும்
                     பஜன்னப்யஜானன்மஹேஸாவலம்பே | 
               த்ரஸந்தம் ஸுதம் த்ராதுமக்ரே ம்ருகண்டோ-
                  ர்யமப்ராணனிர்வாபணம் த்வத்பதாப்ஜம் ||  14 ||       
    महेश  = ஏ   மஹேச்வர   यथावत् = முறைப்படி स्तुतिं  =         
துதியையும் ध्यानं  = தியானத்தையும் अर्चां  = பூஜையையும் 
विधातुं = செய்வதற்கு अजानन् अपि = தெரியாதவனாக 
இருந்தும் भजन् = உன்னைப் போற்றிக் கொண்டு  अग्रे 
தன் முன்னால் त्रसन्तं = பயப்படுகின்ற म्रुकन्डो: सुतं 
மிருகண்டுவின் பிள்ளையான மார்க்கண்டேயனை 
त्रातं = காப்பாற்றுவதற்காக यमप्राण निर्वापणं = யமனுடைய 
உயிரைப் போக்கிய त्वत्पदाब्जं = உன்னுடைய பாத 
கமலத்தைப் अवलम्बे = பற்றிக் கொள்கிறேன் .
       பரமேச்வரனுடைய பாத கமலம் மிகவும் சக்தி 
வாய்ந்தது. அது பக்தர்களை எம பயத்தினின்றும்
காக்கின்றது. முறைப்படி துதி , த்யானம் , பூஜை 
முதலியவற்றைச்  செய்யத் தெரியாதவர்கூட  மிகுந்த  
பக்தியுடன் பரமேச்வரனுடைய பாத பத்மத்தைப் 
போற்றல் வேண்டும் .அவ்வாறு பரமேச்வரனுடைய 

பாத பத்மத்தைப்   போற்றிய மார்கண்டேயனைக் 
காப்பதற்காகப்  பகவான் யமனைக்  காலால் உதைத்து 
அவனை மாய்த்தார். ஆதலால் நாம் பக்தியுடன்
அவரது பாதகாமலத்தைப்  பற்றிக் கொண்டால்  
யமஉபாதை  ஏற்படாது. Mukkuruni pillaiyar & Meenatchi Sundhareswarar - Madurai ( Tamil nadu ).
Photo courtesy: Dinamalar magazine.Sanskrit & Tamil text with thanks to 
Sringeri Sarada  Peetham.


        
 
         

Comments