Dakshinamurthy slokam | Dakshinamurthy mantra

                                                    श्री दक्षिणामूर्ति  स्तोत्रं  10
क्षि
आले पवन्तं मदनाङ्ग भूत्या शार्दूलकृत्या परिधानवन्तम् | आलोकये कञ्चन देशिकेन्द्र  मज्ञान वाराकर             बाड|वाग्निम्  ||

ஆலே பவந்தம் மதநாங்க பூத்யா  ஸார்தூலக்ருத்யா பரிதாநவந்தம் |

ஆலோகயே கஞ்சந தேசிகேந்த்ரம்   அக்ஞான வாராகர பாடவாக்நிம் ||
मादनाङ्ग भूत्या - மன்மதனுடைய உடலின் திருநீற்றால், आलेपवन्तम् - பூச்சுக்களை உடையவரும் सार्दूलकृत्या - புலித்தோலால்  ,परिधानवन्तं - ஆடையணிந்தவரும் अज्ञान वाराकर बादवाग्नीं -அஞ்ஞானமென்னும்  கடலினுள் காணும் படபாக்னியாகத் தோன்றுபவருமான,  कञ्चन  - ஓர், देसिकेन्द्रम् ஆசிரியப்  பெருமானை , आलोकये - காண்கிறேன் . 


 இங்கு பகவத்பாதர்  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின்   ஸாக்ஷாத்காரத்தை விளக்குகின்றார் .முன் சுலோகத்தில் தக்ஷிணா முர்த்தி  என் கண் முன்னே  தோன்றவேண்டுமென்று வேண்ட உடனே அவர் பகவத்பாதரின் கண் முன் காட்சி அளிக்கின்றார்.அவரது  திருமேனியின் திருக்கோலம் இங்கே காட்டப்படுகின்றது . முன் ஒரு சமயம் இமய மலைச்சாரலில் தவம் செய்யும்பொழுது  காமன் அவரது தவத்தைக் கலைக்கத் தனது மலர்க் கணையை  எய்தான். அதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணில் கிளம்பிய தீயால் காமனின் உடலை எரித்து சாம்பலாக்கினார் .அசாம்பலையே  தம் உடல் முழுதும் பூசிக் கொண்டார் .அச்சிவபெருமானே  தக்ஷிணா மூர்த்தியாய்   தோற்றம் தருதலால் அவர் தனது மேனியை அந்தச் சாம்பல் பூச்சினால் அலங்கரித்துக் 

கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார் .இதனால் அவர் தனது  பக்தர்களின் உள்ளத்தெழும்  காமக்கனலைக்  களைந்து  அவர்களைத் தூய்மை வாய்ந்தவர்களாகச் செய்ய வல்லவர் என்பது நன்கு விளங்குகிறது .மேலும் அவர் தம் உடலைப் புலித்தோலால் அலங்கரித்துக் கொண்டிருக்கின் றார்.  புலி  இயற்கையிலேயே எப்பொழுதும்  கோபம் குடி கொண்டுள்ளது. அதன் தோலை உரித்து  ஆடையாகக்  கட்டிக்கொண்டுள்ளார் என்று கூறுவது கோபத்தை அடக்கியிருப்பதைக் காட்டுகிறது .ஆகவே தக்ஷிணாமூர்த்தியின்  அருள் பெற்றவர்களுக்கு காமம்,  க்ரோதம் இரண்டும் விலகி விடும் .உலகில் எல்லாத் துன்பங்களுக்கும் இவ்விரண்டே  மூல காரணம். ஆனால்  அஞ்ஞானம் என்ற இருள் அகத்தில்  இருக்கும்வரை  எப்பொழுதாவது  காம  க்ரோதங்கள்  தலையைக் காட்டலாம். அதற்காக अज्ञान  वाराकर बाड वाग्निं  என்று  அப்பெருமானை இங்கு வர்ணிக்கின்றார் .அஞ்ஞானம் என்பது ஓர் பெருங்கடல்.அதற்கு எல்லையே    கிடையாது.ஆழம் கண்டு பிடிப்பதும் அரிது.ஆனால்  அதற்குள்  தோன்றும் பாடவாக்னி  அக்கடலையே எரித்து  அழித்து  விடுகின்றது . இவ்வாறு அஞ்ஞானம் நீங்கியவுடன் தானாகவே ஸ்வயஞ்ஜோதி  மயமான பெருமான் அகக்கண்  முன் தோன்றுகிறார். அதனால்  மோக்ஷ  சாம்ராஜ்யம் கிட்டுகின்றது .இதற்கு சிறந்த வழி காட்டியாகத்  தோன்றுபவர்  ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியே. அவரை  யான் இங்கு காண்கிறேன். 

                                       Photo courtesy Sri. Murugaiyan  Thangavel





                                         





Comments

  1. Very nice pictures & explanation.

    ReplyDelete
  2. ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஸ்லோகம் படித்து விட்டு ,பாராட்டு தெரிவித்துள்ள உங்களுக்கு நன்றி .எல்லாமே ஜகத் குரு சங்கரரின் சொல்லாக்கம்.I have already published "shiva bhujanga stotram " By Sri Adi Shankara on 27 12.2015 under the label"divine slokas , history of saints & sidhars".My elder brother in law (sri Murugaiyan Thangavel (my daughter's F I L) published these photos in Facebook.Try to read this sloka,you 'll wonder how he is asking god Shiva for the sake of us.

    ReplyDelete

Post a Comment